Tuesday, August 13, 2013

2015-ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை அறிவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 2011–ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியை இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகியவை இணைந்து நடத்தியது. இதில் இலங்கை அணியை வீழ்த்தி டோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது.



2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 23 ஆண்டுக்கு பிறகு அங்கு உலக கோப்பை போட்டி நடக்கிறது. 1992–ம் ஆண்டு நடந்த அந்த உலக கோப்பை போட்டியில் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.

பிப்ரவரி 14–ந்தேதி போட்டி தொடங்குகிறது. மார்ச் 29–ந்தேதி வரை உலக கோப்பை போட்டி நடக்கிறது. இந்தப்போட்டியில் 14 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் (‘பி’ பிரிவு) இடம் பெற்று உள்ளன.

இரண்டு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் வருமாறு:–

‘ஏ’ பிரிவு:- இங்கிலாந்து, ஆஸ்திரேலியா (போட்டியை நடத்தும் நாடு), இலங்கை, வங்காளதேசம், நியூசிலாந்து (போட்டியை நடத்தும் நாடு), குவாலிபையர் 2, குவாலிபையர் 3.

‘பி’ பிரிவு:– தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, குவாலிபையர் 4.






0 comments:

Post a Comment