Monday, August 5, 2013


1. காலையில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும். அப்போது உடலுக்கு வேண்டிய சக்தியை காலை உணவே தருகிறது. காலை முதல் இரவு வரை நன்கு வேலை செய்ய உடலுக்கு சக்தி தேவைப்படுகிறது. அதற்கு காலை உணவு அவசியம்.

2. சிலர் எடையைக் குறைக்க காலை உணவை மட்டும் தவிர்த்து மற்ற நேரங்களில் கொஞ்சம் உண்பார்கள். ஆனால் உண்மையில் காலையில் உண்ணாமல் இருந்து நண்பகலில் குறைவாக உண்ண முடியாது. அப்போதும் வயிறு நிறைய சாப்பிடுவார்கள். ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது. மேலும் அந்த மாதிரியான நேரங்களில் ஆரோக்கியமான உணவையும் பார்த்து உண்ண மாட்டார்கள். எனவே எடை கூடுமே தவிர, குறையாது.

3. மேலும் காலை உணவை உண்ணாமல் இருந்தால் முதலில் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு அதிகரித்து, பின் கலோரியின் அளவு அதிகரிக்கும். மேலும் இது உடலில் 'மெட்டபாலிக் டிஸாடரை' ஏற்படுத்தும். இதனால் எடை தான் அதிகரிக்கும்.

4. வேலைக்குச் செல்பவர்களும், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியரும் காலை உணவை உண்ணாமல் சென்றால் அவர்களால் வேலையில் கவனத்தைச் செலுத்த முடியாது. காலை உணவு அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தந்து கவனத்தை அதிகப்படுத்துகிறது.

5. காலை உணவை உண்டால் உடலில் இருக்கும் தேவையில்லாத கலோரியானது விரைவில் கரைந்து விடும்.

6. வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தையே பின்பற்றுவார்கள். நீங்கள் காலையில் சாப்பிடாமல் இருந்தால் அவர்களும் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள். எனவே அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே நீங்கள் முறையாக காலை உணவை உண்பதன் மூலம் அவர்களுக்கு முன்மாதிரியாக இருங்கள்.

7. காலை உணவை உண்ணும் போது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான தானியங்கள், பழங்கள், பால் போன்றவற்றை உண்டால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, எடையும் கூடாமல் அளவோடு இருக்கும்.

8. வேலைக்குச் சென்று 'சிடுசிடு' வென்று டென்ஷனாக இருக்கிறீர்களா? அதற்குக் காரணமும் காலை உணவைத் தவிர்த்தது தான்.

எனவே, காலை உணவைக் கைவிடாதீர்கள்! 

0 comments:

Post a Comment