Tuesday, August 13, 2013

 5 ஆண்டுகளில் ரூபாய் 550 கோடி வரி பாக்கி!!!!

இந்தியாவின் பணக்கார விளையாட்டு அமைப்பாக பிசிசிஐ செயல்படுகிறது.

ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் பணம் குவிகிறது. ஆனால், பிசிசிஐ அதிக அளவில் வரி பாக்கி வைத்துள்ளது என்றும், இந்த வரி பாக்கி ரூபாய் 550 கோடி என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியாகியுள்ளது.

கடந்த 5  ஆண்டுகளில்,இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், 550 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது என்பது, சமூக ஆர்வலரான சுபாஷ் சந்திர அகர்வால், என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வருமான வரித்துறையினரிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளார்.



ஆனால், பிசிசிஐக்கு கடந்த 5 ஆண்டுகளில் கிடைத்த வருவாயைப் பார்க்கும்போது, 2010-11ம் ஆண்டில், ரூபாய் 874.18 கோடி கிடைத்து இருக்கிறது என்றும், இதற்கு வரி என்று  பார்த்தால்,337.11 கோடி வரி செலுத்த வேண்டும் என்றும், இப்படி கடந்த 5 வருடங்களில் 550 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது என்றும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வருமானவரி துறையினரிடம் இருந்து தனி நபர் ஒருவர் கேட்டு பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

0 comments:

Post a Comment